மேலும் செய்திகள்
பிளஸ் நிறுவனம் நிவாரணம் வழங்கல்
17-Dec-2024
புதுச்சேரி : இந்தியன் வங்கி சார்பில், புயலால் பாதிக்கப்பட்ட, 5 ஆயிரம் குடும்பங்களுக்கு, 22.82 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.புதுச்சேரி இந்தியன் வங்கி சார்பில், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சி.எஸ்.ஆர்., திட்டத்தின் மூலம் 22.82 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, 5 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, புதுச்சேரி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக, அமைச்சர் லட்சுமிநாராயணன், பயனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.நிகழ்ச்சியில், கலெக்டர் குலோத்துங்கன், இந்தியன் வங்கி கள பொது மேலாளர் வெங்கடேசன், மண்டல மேலாளர் வெங்கட சுப்ரமணியம், துணை மண்டல மேலாளர் சுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனார். வங்கி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த கட்டமாக, நிவாரண உதவிகள் வழங்கப்படும் என மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.
17-Dec-2024