உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்தியன் வங்கி சிறப்பு முகாம்; ரூ.64 கோடிக்கு கடன் வழங்கல்

இந்தியன் வங்கி சிறப்பு முகாம்; ரூ.64 கோடிக்கு கடன் வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி உள்ளிட்ட 4 இடங்களில் இந்தியன் வங்கி சார்பில், நடந்த சிறப்பு தனி நபர் கடன் முகாமில், ரூ. 64 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மண்டலம் இந்தியன் வங்கி சார்பில், சிறப்பு தனி நபர் கடன் வழங்கும் முகாம் வள்ளலார் சாலை, வேல்சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடந்தது. புதுச்சேரி மண்டல மேலாளர் குமார்துரை குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். இணை மேலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.முகாமில், தனி நபர் கடன் மற்றும் வீட்டு கடன், வாகனக் கடன், சிறு, குறு தொழில் மற்றும் வர்த்தக கடன், தனி நபர் மற்றும் தொழில் அடமான கடன் உள்ளிட்ட கடன்கள் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.பயனாளிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுள்ள நபர்களுக்கு, கடன்கள் வழங்கப்பட்டது. இதில், புதுச்சேரி, காரைக்கால், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இடங்களில் நடந்த முகாமில், வீட்டு கடன் ரூ. 24 கோடி, தனி நபர் கடன் ரூ. 12 கோடி, சிறு குறு தொழில் கடன் ரூ. 28 கோடி என, மொத்தம் ரூ. 64 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி, மண்டல முதன்மை மேலாளர் தெரிவித்தார்.புதுச்சேரியில் நடந்த முகாமில், இந்தியன் வங்கி தனி நபர் கடன், முதன்மை மேலாளர் சரவணன், மண்டல முதன்மை மேலாளர் செல்வம், சிறு குறு தொழில் முதன்மை மேலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை