இந்திய கம்யூ., நகர குழு கூட்டம்
புதுச்சேரி: இந்திய கம்யூ., நகர குழு கூட்டம், புதுச்சேரியில் நடந்தது. கூட்டத்தில், இன்பமொழி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜீவானந்தம் நடைபெற்ற வேலைகள் குறித்து பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ., கலைநாதன் மாநில அரசியல் மற்றும் அமைப்பு நிலைகள் குறித்து பேசினார். மாநில பொருளாளர் சுப்பையா, நிர்வாகக்குழு உறுப்பினர் அந்தோணி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெரிய மார்க்கெட் இடங்களை கோர்ட் உத்தரவு என, இடிக்கப்படுவது கண்டிக்கதக்கது. வியாபாரிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.