இந்திய கம்யூ., போராட்டம் அறிவிப்பு
புதுச்சேரி: ஒப்பந்த ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என, இந்திய கம்யூ., தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலச் செயலாளர் சலீம் விடுத்துள்ள அறிக்கை; அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 292 ஒப்பந்த ஆசிரியர்களை ஜனவரிக்குள் பணி நிரந்தரம் செய்வதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உறுதியளித்திருந்தார். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு காலம் கடத்தாமல் இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தவறினால் ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.