உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திரா சிக்னல் ப்ரி லெப்ட் பாதையில் மீண்டும் தொடரும் விபத்து அபாயம் சென்டர் மீடியன் நிரந்தரமாக மூடப்படுமா?

இந்திரா சிக்னல் ப்ரி லெப்ட் பாதையில் மீண்டும் தொடரும் விபத்து அபாயம் சென்டர் மீடியன் நிரந்தரமாக மூடப்படுமா?

புதுச்சேரி: இந்திரா சிக்னல் கோரிமேடு ப்ரிலெப்ட் பாதையில் தற்காலிக பேரிகார்டுகளை துாக்கி எறிந்துவிட்டு வாகனங்கள் குறுக்கே புகுந்து வருவதால் மீண்டும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி இந்திரா சிக்னலை கடந்து விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு ப்ரி லெப்ட் முறைப்படுத்தப்பட்டது. ஆனால், ஜே.ஜே., பெட்ரோல் பங்க் எதிரே மட்டும் 20 அடி நீளத்திற்கு தேவையில்லாமல் ப்ரி லெப்ட்' சென்டர் மீடியனில் இடைவெளி விடப்பட்டது.இந்த இடைவெளி காரணமாக அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் நடக்கிறது. 'தினமலர்' நாளிதழிலும் அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், அவ்விடத்தில் பேரிகார்டுகளை போட்டு போக்குவரத்து போலீசார் மூடினர்.ஆனால் இப்போது அந்த பேரிகார்டுகளை துாக்கி எறிந்துவிட்டு மீண்டும் ப்ரி லெப்டில் குறுக்கும், நெடுக்குமாக வாகன ஓட்டிகள் புகுந்து வருகின்றனர். குறுக்கில் புகும் வாகனங்கள், ப்ரிலெப்ட் பாதையையும் சூழ்ந்து கொள்வதால் கோரிமேடு செல்ல வேண்டிய வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து வருகின்றன.மேலும், தடுப்பு கட்டையில் இடைவெளி உள்ள இடத்தில் விபத்து அபாயம் தலைதுாக்கியுள்ளது. இந்த நிரந்தரமாக இந்த இடைவெளியை மூடுவது மட்டுமே ஒரே தீர்வு. விபத்து அபாயம் கருதி, சென்டர் மீடியனில் விடப்பட்ட இடைவெளியை நிரந்தரமாக மூட கவர்னர், முதல்வர், பொதுப்பணித் துறை நெடுஞ்சாலை பிரிவுக்கு உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை