உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுப்ரமணிய சுவாமி கோவிலில்  பங்குனி உத்திர விழா துவக்கம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில்  பங்குனி உத்திர விழா துவக்கம்

புதுச்சேரி: உருளையன்பேட்டை சஞ்சய் காந்தி நகரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா துவங்கியது.புதுச்சேரி, சஞ்சய் காந்தி நகரில் அமைந்துள்ள, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 21ம் ஆண்டு, பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது. இதையொட்டி, கொடியேற்றம் நேற்று காலை நடந்தது.சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்ததையடுத்து, ரோஜா வாகனத்தில், இரவு சுவாமி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.ஏற்பாடுகளை, ஆலய அதிகாரி சீனு மோகன்தாஸ் மற்றும் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர். பிரம்மோற்சவ விழா வரும், 25ம் தேதி நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை