| ADDED : செப் 07, 2026 11:14 PM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக சுற்றுலா ஆய்வு துறை சார்பில் ஐந்து நாள் சர்வதேச மாநாடு துவக்க விழா மரபு மற்றும் பண்பாட்டு கலையரங்கில் நேற்று நடந்தது. சுற்றுலா ஆய்வு துறை தலைவர் சிபி வரவேற்றார். கருத்தரங்க இயக்குநர் அனுசந்திரன் நோக்கவுரையாற்றினார். மாநாட்டினை துணைவேந்தர் பிரகாஷ் பாபு துவக்கி வைத்து ஆய்வு கட்டுரை நுாலினை வெளியிட்டார். இயக்குநர் நடராஜன், மாணவர் நல டீன் வெங்கட்ட ராவ் வாழ்த்தி பேசினர். கர்நாடக மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்யநாராயணா, பேராசிரியர்கள் லுாசியா காகிகா கார்வால் ேஹா அகிதா லிலினா சிறப்பு விருந்தினர்களாக கலந்து காண்டனர். தொடர்ந்து நடந்த மாநாட்டில் சுற்றுலா அகாடமியுடன் தொழில் துறையை இணைப்பதில் இந்தியா ஐரோப்பிய கண்ணோட்டம் என்ற தலைப்பில் சுற்றுலா வளர்ச்சி குறித்து அலசப்பட்டது. சிறப்பு அமர்வில் சுற்றுலா, விருந்தோம்பல், சேவை ஆய்வுகள் ஆகியவற்றில் நிலைத்தன்மை தொழில்நுட்ப மேம்படுத்தும் திட்டம் குறித்து குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இம்மாநாடு வரும் 11ம் தேதி வரை நடக்கின்றது. மாநாட்டில் ஒடிசா ராவன்ஷா பல்கலைக்கழக துணைவேந்தர் அர்கா குமார் தாஸ் மெகாஹபத்ரா, கர்நாடகா மத்திய பல்கலைக்கழக வழிநடத்தல் குழு உறுப்பினர் மகேந்தர் ரெட்டி கவினோலா உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை புதுச்சேரி பல்கலைக்கழக சுற்றுலா ஆய்வு துறையுடன், லாட்வியா, போர்ச்சுக்கல், ஐரோப்பிய கூட்டமைப்பு இணைந்து செய்துள்ளன.