மேலும் செய்திகள்
யோகா கல்லுாரி சார்பில் உலக அமைதி பேரணி
08-Nov-2025
புதுச்சேரி: யுனிவர்சல் பீஸ் புவுண்டேசஷன் சார்பில், உலகளாவிய அமைதி தின விழா புதுச்சேரி சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் குருமகான் தலைமை தாங்கினார். அமைச்சர் திருமுருகன் சிறப்புரையாற்றினார். விழாவில் மனித நேயம், கருணை, சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் சர்வதேச அமைதியை ஊக்குவிக்கும் ஒரு வரலாற்று முக்கிய நிகழ்வாக அமைந்தது. இதில் நடிகை நமீதா,துறை பிரமுகர்கள், சமூக அமைப்புகள், மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். அமைதி செய்தி உரைகள், கலாசார நிகழ்ச்சிகள், உலக சமாதான பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை ஆச்சார்யா கல்வி குழுமத்தின் தலைவர் அரவிந்தன் செய்திருந்தார்.
08-Nov-2025