உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சர்வதேச மகளிர் தின விழா 

சர்வதேச மகளிர் தின விழா 

புதுச்சேரி, : புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஹார்ட்புல்னஸ் தியான அறக்கட்டளை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது.வணிகவியல் துறை பேராசிரியர் கற்பகம் வரவேற்றார். கல்லுாரி இயக்குனர் செல்வராஜ் தலைமை தாங்கினார். விழாவை சத்யா சிறப்பு பள்ளியின் இயக்குனர் சித்ரா ஷா, ஹார்ட்புல்னஸ் தியான அறக்கட்டளையின் புதுச்சேரி கிளை தலைவர் பத்மப்பிரியா லியே ஆகியோர் துவக்கி வைத்தனர். தியான அறக்கட்டளையின் சார்பில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் தியான பயிற்சி அளிக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சாதனையாளர்கள் விருது சத்யா சிறப்பு பள்ளி இயக்குனர் சித்ரா ஷா, அழகு கலை நிபுணர் தேவி, ஆங்கிலத்துறை பேராசிரியர் ரூபி தவசீலி, இயற்பியல் துறை முனைவர் ரூபகலா, வணிகவியல் துறை ஆராய்ச்சி மாணவி தீபிகா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.தொடர்ந்து விழாவையொட்டி நடந்த ரங்கோலி, இந்திய பண்பாட்டை குறிக்கும் ஆடை அலங்காரம், இசை, சிகை அலங்காரம், மருதாணி போடுதல் போன்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.ஆங்கிலத் துறை பேராசிரியர் ரூபி தவசீலி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை