நாய், காகங்களுக்கு விஷம் வைத்து கொன்றவர்கள் குறித்து விசாரணை
புதுச்சேரி: கொம்பாக்கம் குமரன் நகர் பகுதியில், கடந்த 24ம் தேதி, மூன்று தெரு நாய்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட காகங்கங்கள் இறந்து கிடந்தன. அதே போன்று, நேற்று முன்தினம் அதே பகுதியில், மேலும் ஒரு நாய் இறந்து கிடந்தது. நாய்கள் மற்றும் பறவைகளுக்கு உணவு கொடுக்கும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதுபற்றி, அப்பகுதியை சேர்ந்த செல்வியம்மாள், 43, என்பவர், நாய்கள், பறவைகளுக்கு விஷம் வைத்த, நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார். அதன்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, இறந்த நாய்களின் உடல்களை, விலங்கு நல மருத்துவமனையில், பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்து, நாய்கள், காகங்களுக்கு, விஷ வைத்து கொன்ற நபர் யார் என,போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.