மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
4 hour(s) ago
புதுச்சேரி மாநில சாலைகளில் ஓடும் மிகவும் பழைய, கரும்புகை மூலம் மாசு ஏற்படுத்தும் வாகனங்களை கழித்துக்கட்டுவதை நோக்கமாக கொண்டு இந்த பழைய வாகன அழிப்புக்கொள்கை வரிச் சலுகையுடன் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.புதிய வாகனஅழிப்பு கொள்கையின்படி ஸ்கூட்டர், பைக், கார் உள்ளிட்ட தனி நபர் வாகனங்கள் 15 ஆண்டுகளும் அவை கட்டாயம் பரிசோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும். இதேபோல் லாரி உள்ளிட்ட வர்த்தக வாகனங்கள் 15 ஆண்டுகள் ஓடியிருந்தால் அவையும் கட்டாயம் பரிசோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும். அரசு வாகனங்களுக்கும் இது பொருந்தும்.இந்த வாகனங்கள் மோசமான நிலையில் இருந்தால் அழிப்புக்கு அனுப்ப அதிகாரிகள் பரிந்துரை செய்வர். அவ்வாகனங்கள் பயன்பாட்டுக்கு உரியவை என தெரியவந்தால் கூடுதலாக 5 ஆண்டுகாலம் சாலைகளில் இயங்க அனுமதிக்கப்பட்டு பிறகு, மீண்டும் பரிசோதனைக்குட்படுத்தி கழித்துக்கட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும்.இதற்காக தானியங்கி வாகன ஆய்வு மையம், ஸ்க்ரேப்பேஜ் மையம் புதுச்சேரியில் ஏற்படுத்தப்பட உள்ளது. வாகன உரிமையாளர்கள் இந்த ஸ்க்ரேப்பேஜ் மையங்களுக்குச் சென்று தங்களது வாகனங்களைக் கொடுத்து விடலாம். பழைய வாகனங்களைப் பெற்றுக் கொண்ட பிறகு வாகன உரிமையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.புதிய வாகனத்தை வாங்குவதை ஊக்கப்படுத்த சாலை வரிக்கு உரிமையாளர்களுக்கு வரிச்சலுவை வழங்கப்படும். இதற்காக வாகனங்களின் நிலை குறித்து தானியங்கி சோதனை மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.புதிய வாகன அழிப்பு கொள்கையின்படி, புதுச்சேரியில் பொது போக்குவரத்து இல்லாத தனி நபர் வாகனங்களுக்கு 25 சதவீதம் வரை மோட்டார் வாகன வரியில் சலுகை பெற வேண்டும். பொது போக்குவரத்து வாகனங்களுக்கு 15 சதவீதம் வரை வரிசலுகை ஆண்டிற்கு பெற முடியும். இருப்பினும் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை வரி சலுகை பெற முடியும்.புதிய வாகன அழிப்பு கொள்கையின்படி மாநிலத்திற்கு ஆண்டிற்கு 20 சதவீதம் வீதம் பழைய வாகனங்கள் அழிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு 1.5 கோடி ரூபாய் வரை போக்குவரத்து துறை வரி இழப்பு ஏற்படும். பழைய வாகனங்களை அழித்து வரிசலுகை கொடுப்பதன் மூலம் ஐந்து ஆண்டுகளில் 7.50 கோடி ரூபாய் போக்குவரத்து துறைக்கு வரி இழப்பு ஏற்படும்.பழைய வாகன அழிப்பு கொள்கை முழு மாநிலத்திற்கு பயன்பாட்டிற்கு வரும்போது புதிய வாகனங்களின் விற்பனை அதிகமாகும். இதனால், வாகன தயாரிப்பாளர்கள் பயன்பெறுவார்கள். காற்று மாசுபாடு பெருமளவு குறையும் மக்கள் மாற்று எரிபொருளுக்கு செல்வது இன்னும் பயனளிக்கும் விதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago