மேலும் செய்திகள்
கட்டுமான தொழிலாளர் குடும்பத்துக்கு நிதியுதவி
20-Sep-2026
புதுச்சேரி: உயிரிழந்த காப்பீட்டாளர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. புதுச்சேரி தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய தாமேஷ், பாலாஜி, வெங்கடேசன் ஆகிய 3 காப்பீட்டாளர்கள் விபத்தில் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு இ.எஸ்.ஐ., சார்பில் உதவித்தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி, புதுச்சேரி இ.எஸ்.ஐ., மண்டல அலுவலகத்தில் நடந்தது. இதற்கான ஆணையை, இ.எஸ்.ஐ., மண்டல இயக்குநர் தேவகி, மாநில மருத்துவ அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் காப்பீட்டாளர்களின் குடும்பத்தினரிடம் ஆணையை வழங்கினர்.
20-Sep-2026