மேலும் செய்திகள்
பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
28-Apr-2025
திருக்கனுார்: செல்லிப்பட்டில் வவுச்சர் ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு, பெரியதோப்பு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புராமன், 39; விளையாட்டுத் துறையில் வவுச்சர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுந்தரி. 2 பிள்ளைகள் உள்ளனர்.இவரது தனது வீட்டு செல்பில் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 30 கிராம் நகை, ரூ. 90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வைத்திருந்தார். கடந்த ஏப்., 6ம் தேதி அவசர தேவைக்காக பணத்தை எடுக்க முயன்றபோது, நகை மற்றும் பணம் திருடு போய் இருந்தது. இது குறித்து திருக்கனுார் போலீசில் நேற்று முன்தினம் குப்புராமன் புகார் அளித்தார். அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, நகை மற்றும் பணத்தை திருடிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
28-Apr-2025