உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மர் இயக்குனர் பதவிகாலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு

ஜிப்மர் இயக்குனர் பதவிகாலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு

புதுச்சேரி : தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனையின்இயக்குனராக ராகேஷ் அகர்வால் கடந்த 2019 ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நியமிக்கப்பட்டார்.அவருடைய பதவிக்காலம் நேற்றுடன் முடிந்த சூழ்நிலையில் மீண்டும் ஓராண்டு அல்லது புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரை தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்.,எம்.டி.,முடித்தார். அதன் பின் லண்டனில் தொற்று நோயிலில் மாஸ்டர் டிகிரி முடித்தார். பின், லக்னோ சஞ்சய் காந்தி மருத்துவ மேற்படிப்பு மையத்தில் பேராசிரியராக கடந்த 1991ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.அங்கு 2018 ம் ஆண்டு வரை பணியாற்றிய அவர், அதன் பிறகு ஜிப்மரில் சேர்ந்தார். 300க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்