உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரிக்கு வருகிறாரா கைலாசா நித்யானந்தா?

 புதுச்சேரிக்கு வருகிறாரா கைலாசா நித்யானந்தா?

புதுச்சேரி: புதுச்சேரி, ஏம்பலத்தில், கைலாசா நித்யானந்தா தியான பீடத்திற்கு குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தியான பீட நிர்வாகிகள், புதுச்சேரி சட்டசபையில், முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்து பேசினர். தியான பீட குடமுழுக்கு விழாவில் பங்கேற்க, புதுச்சேரிக்கு நித்யானந்தா வருகை தர உள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, மத்திய அரசிடம் பேசி வருவதாகவும், நித்யானந்தா புதுச்சேரி வரும்போது, மாநில அரசு பாதுகாப்பு தர வேண்டும் என்றும், முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். இதைக் கேட்ட ரங்கசாமி, 'அவர் வரட்டும் பார்த்துக்கலாம்' என, தெரிவித்தார். அவருக்கு, கைலாசா சிறப்புகள் அடங்கிய புத்தகத்தையும், தியான பீட நிர்வாகிகள் வழங்கினர். பல்வேறு வழக்குகளில் சிக்கி, போலீசாரால் தேடப்பட்டு வந்த நித்யானந்தா, 2020ல், 'கைலாசா' என்ற தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார். அவர் புதுச்சேரிக்கு வருகை தர இருப்பதாக, தியான பீட நிர்வாகிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

A R Vijayananth
செப் 04, 2026 12:17

நித்தி எங்கே இருக்கார் என்று விசாரித்து கைது செய்ய வேண்டும் . குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருப்பவர்க்கு எதற்கு போலீஸ் பாதுகாப்பு எவ்வளவு தைரியம் இருந்தால் அவர் தரப்பில் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்


மேலும் செய்திகள்