காரைக்கால் கிரைம் செய்திகள்
கணவர் மாயம் மனைவி புகார்: காரைக்கால் திருநள்ளாறு வீரன் கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜ், 37;என்பவர் கடந்த 12ம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.மனைவி சிவசங்கரி அளித்த புகாரின்பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு தேடிவருகின்றனர். இவரைப்பற்றிய தகவல் தெரிந்தால் திருநள்ளாறு காவல் நிலையம் 04368-236465, உதவி ஆய்வாளர் 9080651504 எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். போதையில் தகராறு 4 பேர் கைது: காரைக்கால் திருப்பட்டினம் மேலவாஞ்சூர் மாதா கோவில் அருகில் மதுபோதையில் தகராறு செய்த நாகை மாவட்ட மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்த மணி மகன் ஞானப்பிரகாசம், 39; போலீசார் கைது செய்தனர். அதேபோல் போதையில் ரகளை செய்த நாகை மாவட்ட கிடாமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் அஜித்குமார், 28; நிரவி போலீசார் கைது செய்தனர். கோட்டுச்சேரி வரிச்சிக்குடி கழுகுமேடு பகுதியில் மது போதையில் தகராறு செய்த தரங்கம்பாடி குட்டியான்டூர் பகுதியை சேர்ந்த வீரமணி ,30; போலீசார் கைது செய்தனர். நெடுங்காடு வாஞ்சியாறு கருமாதி மண்டபத்தில் மது அருந்தி தகராறு செய்த நாகை மாவட்ட திருக்குவளை பகுதியை சேர்ந்த அருண், 36; என்பவரை நெடுங்காடு போலீசார் கைது செய்தனர்.