உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வடமாநிலங்களில் காராமணி விளைச்சல் அதிகம் புதுச்சேரியில் விலை குறைவு

வடமாநிலங்களில் காராமணி விளைச்சல் அதிகம் புதுச்சேரியில் விலை குறைவு

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதியான கடலுார், திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதியில் காராமணி பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அறுவடை செய்யப்பட்ட காராமணி பயிர் மூட்டைகள், புதுச்சேரி தட்டாஞ்சாவடி மார்கெட் கமிட்டிக்கு வரும். அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு வியாபாரத்திற்கு வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள்.இந்நிலையில், இந்தாண்டு, காராமணி பயிர்களின் விலை குறைந்துள்ளது. ஒரு மூட்டை காராமணி பயிரின் விலை ரூ. 6 ஆயிரத்து 60க்கு விற்கப்பட்டது. அதற்கு காரணம் வட மாநிலங்களில் காராணி பயிர்களை அதிக விளைச்சல் இருந்தது. அதனால் வியாபாரிகள் புதுச்சேரிக்கு காரமணி பயிர்களை இ - நாம் சந்தை மூலம் பயிர்களை வாங்க வரவில்லை.கடந்த ஆண்டு புதுச்சேரியில், காராமணி பயிர் ஒரு மூட்டை ரூ. 7 ஆயிரத்திற்கு மேல் விலை போனது. இத்தாண்டு, வடமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் காரமணி பயிர் வாங்க வராததால், மூட்டைகள் தட்டாஞ்சாவடி மார்கெட் கமிட்டியில் தேக்கமடைந்துள்ளது.மேலும், உளுந்து ஒரு மூட்டையின் விலை ரூ. 9 ஆயிரத்து 250க்கும், விற்பனை செய்யப்பட்டது. நேற்று புதுச்சேரிக்கு காராமணி பயிர் 150, உளுந்து 550, வேர்கடலை 50 மூட்டைகள் வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை