மேலும் செய்திகள்
புதுச்சேரியில் 101 டிகிரி வெயில்
1 hour(s) ago
குட்கா விற்ற 2 பேர் கைது
1 hour(s) ago
தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கம்
1 hour(s) ago
புதுச்சேரி : லோக்சபா தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு நன்னடத்தை விதிகளை தேர்தல் துறை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்
ஆட்சியில் இருக்கும் கட்சி, அரசின் சாதனைகள் தொடர்பான விளம்பரங்களை அரசின் செலவினத்தில் வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது. வேட்பாளராக இல்லாத நிலையில் எந்த ஒரு அமைச்சரும் அவர் ஓட்டளிக்கும் ஓட்டுச்சாவடியை தவிர பிற ஓட்டுச்சாவடிகள், ஓட்டு எண்ணும் மையத்தில் நுழைய கூடாது. அரசு அலுவலக பணிகளை தேர்தல் பிரசாரம் தொடர்பாக பணிகளோடு கலந்து கொள்ளுதல் கூடாது. வாக்காளர்களுக்கு எந்தவிதமான துாண்டுதலும், நிதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ வழங்க கூடாது. மற்ற கட்சிகளின் தலைவர்கள் அல்லது ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, பொது நடவடிக்கைகளுடன் தொடர்பு இல்லாததை பற்றி எதையும் விமர்சிக்க கூடாது. சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகள், திரிபுகளின் அடிப்படையில் மற்ற கட்சிகள் அல்லது அவர்களது ஊழியர்களை விமர்சிக்க கூடாது. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்பட எந்த வழிபாட்டு தலங்களையும் தேர்தல் பிரசார இடமாக பயன்படுத்த கூடாது. பேச்சு, சுவரொட்டிகள், இசை நிகழ்ச்சிகளும் இவற்றில் உள்ளடக்கம்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago