உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆற்காடு ஐயனாரப்பன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

ஆற்காடு ஐயனாரப்பன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

திருபுவனை: மதகடிப்பட்டு புதுநகரில் உள்ள ஆற்காடு ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (15ம் தேதி ) நடக்கிறது.திருபுவனை அடுத்த மதகடிப்பட்டு புதுநகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆற்காடு ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2003ம் ஆண்டு செப். 10ம் தேதி நடைபெற்றது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு தற்போது மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.விழாவையொட்டி, இன்று காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. மதியம் 1:00 மணிக்கு யாக கால பூஜை ,கலா தாபனம், இரவு அஷ்டபந்தனம் மருந்துசாத்துதல், நடக்கிறது.நாளை (15ம் தேதி) காலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜையும், காலை 9:00 மணிக்கு யாத்ராதானமும், காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 10:15 மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும், 11:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி, விழா குழுவினர் மற்றும் கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை