நாகமுத்து மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
அரியாங்குப்பம்; நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில், நாளை கும்பாபிேஷகம் நடக்கிறது. கடலுார் சாலை நைனார்மண்டபத்தில், நாகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி பணிகள் முடிந்த நிலையில், நாளை 6ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது. அதையொட்டி, நேற்று காலை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதற்கால ஹோமம் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு இண்டாம் கால பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மாலை 6:00 மணியளவில், மூன்றாம் கால பூஜை, மூல மந்திர ஹோமங்கள் நடக்கிறது. நாளை 6ம் தேதி நான்காம் கால பூஜை, அஸ்திர ஹோமம், கடம் புறப்பாடு நடக்கிறது.காலை 8:00 மணியளவில், நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடக்கிறது.