உள்ளூர் செய்திகள்

 கும்பாபிேஷகம்

நெட்டப்பாக்கம்: மடுகரை சீனுவாச பெருமாள் கோவில் மகா குப்பாபிேஷகம் நேற்று முன்தினம் நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் புதிதாக கட்டிய சீனுவாச பெருமாள் கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு கோ பூஜை, விஸ்வரூபம், காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடு, மகா கும்பாபி ேஷகம் நடந்தது. அதேபோல், மடுகரை சுந்தரவிநாயகர், அரசடி விநாயகர், திரவுபதியம்மன், பிடாரி அம்மன், மாரியம்மன், அய்யனாரப்பன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. இதில் துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் கிராம மக்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் தனபூபதி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை