மேலும் செய்திகள்
குட்கா விற்ற வாலிபர் மீது வழக்கு
10-Feb-2025
புதுச்சேரி ; உருளையன்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். புதுச்சேரி - கடலுார் சாலை, அந்தோனியர் கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடையில் போலீசார் சோதனை செய்தனர். அதில், ஹான்ஸ், கூல் லீப், சிகரெட் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.இதையடுத்து, கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1,600 மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர் ராஜூ, 39; மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10-Feb-2025