மேலும் செய்திகள்
லாட்டரி விற்ற இருவர் கைது
23-Oct-2024
புதுச்சேரி: சாரம் அவ்வை திடலில் லாட்டரி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி சாரம் அவ்வை திடல் அருகே தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், டி.நகர்., சப்இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, லாட்டரி விற்ற நபரை மடக்கி பிடித்தனர்.விசாரணையில், சாரம், கவிக்குயில் நகர், முருக செட்டியார் நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்த பிரசாந்த்,31; என்பதும், கேரளாவில் விற்பனையாகும் லாட்டரி சீட்டின் கடைசி 3 நம்பர்களை குறித்து கொடுத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.பிரசாந்திடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 5,050 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
23-Oct-2024