உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ரூ.10க்கு துணிப்பை வழங்கும் இயந்திரம் :பஸ் ஸ்டாண்டில் மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் ஏற்பாடு

 ரூ.10க்கு துணிப்பை வழங்கும் இயந்திரம் :பஸ் ஸ்டாண்டில் மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் ஏற்பாடு

புதுச்சேரி: பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக புது பஸ்டாண்ட்டில் பத்து ரூபாய்க்கு துணிப்பை வழங்கும் ஏ.டி.எம்., இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. நாடு முழுதும் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தால் மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் இந்த அரசாணையை செயல்படுத்தும் பொருட்டு பல செயல்பாடுகளை செய்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளை ஊக்குவிப்பதற்கும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், மாற்றுப்பொருளாக ரூ.20 மதிப்பிலான துணிப்பையை மலிவான விலையில் ரூ.10க்கு வழங்கு கிறது. இந்த துணிப்பையை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் புதுச்சேரி நகராட்சியின் ஸ்மார்ட் பஸ் ஸ்டாண்ட்டில் துணிப்பை வழங்கும் ஏ.டி.எம்., இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, மாசுக்கட்டுப்பாட்டு குழுமம், உறுப்பினர் செயலர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். நேரு எம்.எல்.ஏ., திறந்து வைத்து பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து, பொதுமக்கள் 10 ரூபாய் செலுத்தி துணிப்பையை ஆர்வமுடன் பெற்றனர். ஏற்பாடுகளை மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் விஞ்ஞானி செல்வநாயகி, உதவி அறிவியல் அதிகாரி விமல்ராஜ், பன்னீர் செல்வம், சீனிவாசன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்