உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் குப்பை கொட்டியவர் கைது: லாரி பறிமுதல்

 அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் குப்பை கொட்டியவர் கைது: லாரி பறிமுதல்

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் குப்பை கொட்டிய டிரைவரை போலீசார் கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் பலர், குப்பையை கொட்டி வந்ததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, குப்பை கொட்டுவதை தடுப்பதற்காக, குப்பை கொட்டுவதை படம் பிடித்து அனுப்பினால், ரூ.2,000 சன்மானம் வழங்கப்படும் என உழவர்கரை நகராட்சி அறிவித்தது. மேலும், சாலையின் இருபுறமும், குப்பை கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று புறவழிச்சாலையில், லாரியில் இருந்து குப்பை கொட்டும் தகவல் முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, சாய்பாபா கோவில் அருகே டி.என்.18-இ.6439 பதிவெண் கொண்ட டிப்பர் லாரியில் இருந்து குப்பையை கொட்டிக் கொண்டிருந்த, நெல்லித்தோப்பு, பெரியார் நகர் சுதன்,37; என்பவரை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக பொது இடத்தில் குப்பை கொட்டி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது ஆகிய பிரிவுகளில் வழக்க பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர். இதேபோன்று கடந்த 12ம் தேதி இதே சாலையில் குப்பை கொட்டிய டாடா ஏஸ் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்