மேலும் செய்திகள்
பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம்
27-Jul-2025
புதுச்சேரி : புதுச்சேரி ஏழை மாரியம்மன் கோவிலில் ஆடி மகா உற்சவத்தை முன்னிட்டு, தேர் வீதியுலா நடந்தது. புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் ஸ்ரீதேவி ஏழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடி மகா உற்சவம் கடந்த 28ம் தேதி துவங்கியது. இதையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக நேற்று தேர் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, நாளை (3ம் தேதி) மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல், 4ம் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
27-Jul-2025