| ADDED : மார் 15, 2024 10:56 PM
புதுச்சேரி: சந்தை புதுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான தற்காப்புக் கலை சிலம்பம் பயிற்சி நிறைவு விழா நடந்தது.பள்ளியின் பொறுப்பாசிரியர் கணவா சையது தலைமை தாங்கினார். பயிற்சி பெற்ற மாணவிகள், பயிற்சியாளர் முத்துக்குமரன் முன்னிலையில் சிலம்பாட்ட தற்காப்பு கலையை செய்துகாட்டினர். பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மகாலட்சுமி, அக்பர் ராஜ், கலைச்செல்வி, சோமசுந்தரம், ராஜசேகர், கலையரசி, சுபாஷினி, அருண்பிரசாத் ஆகியோர் செய்திருந்தனர்.