உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தற்காப்புக் கலை பயிற்சி நிறைவு விழா

தற்காப்புக் கலை பயிற்சி நிறைவு விழா

திருக்கனுார் : வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான தற்காப்புக் கலை பயிற்சி நிறைவு விழா நடந்தது. ஆசிரியை ரேணு வரவேற்றார். தலைமை ஆசிரியர் வீரையன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவத் தலைவர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பாலகுமார் தொகுத்து வழங்கினார்.விழாவில், வாதானுார் சென்டரல் பேங்க் மேலாளர் ராமர், கிராம நிர்வாக அலுவலர் பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினர். இதில், பயிற்சியாளர் சுஜிதா மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சி முடித்த மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் செயல்முறை விளக்கம் அளித்தனர். விழாவில், ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் குமுதா, வேலவன், ஜென்னி, ஓம்சாந்தி, குப்புசாமி, சுஜாதா, தையல்நாயகி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ