உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாசிமக தீர்த்தவாரி

மாசிமக தீர்த்தவாரி

புதுச்சேரி புதுச்சேரி, பெரியகாலாப்பட்டு பகுதியில் மாசி மக தீர்த்தவாரி நடந்தது.தீர்த்தவாரியில் புதுச்சேரி நடுக்குப்பம், சின்ன காலாப்பட்டு, கணபதி செட்டிக்குளம் மற்றும் தமிழக பகுதியான தைலாபுரம், கீழ்புத்துப்பட்டு, ராயபுதுப் பாக்கம், நல்லாவூர், கந்தாடு, காணிமேடு, அச்சரம்பட்டு, இரும்பை, காட்ராம்பாக்கம், புளிச்சபள்ளம், தேற்குணம், ஒழிந்தப்பட்டு, திண்டிவனம் மொளசூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பகுதி களில் இருந்து சுவாமிகள் ஊர்வலமாக வந்து, காலாப்பட்டு கடற்கரையில் தீர்த்தவாரி நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில், காலாப்பட்டு மக்கள் நல சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் பாட்டில் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை