உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாஸ்டர்ஸ் டி.10 கிரிக்கெட் போட்டி புதுச்சேரி மேற்கு, காரைக்கால், ஏனாம் அணி வெற்றி

மாஸ்டர்ஸ் டி.10 கிரிக்கெட் போட்டி புதுச்சேரி மேற்கு, காரைக்கால், ஏனாம் அணி வெற்றி

புதுச்சேரி : புதுச்சேரி மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி மேற்கு, காரைக்கால், ஏனம் அணிகள் வெற்றிப்பெற்றன.கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம். நிறுவனம் இணைந்து, புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, மாஸ்டர்ஸ் 10 ஒவர் கிரிக்கெட் போட்டி கேப் சீசெம் மைாதனத்தில் நடந்து வருகிறது. நேற்று காலை 9:15 மணிக்கு மாஹே அணி, புதுவை மேற்கு அணி மோதின. முதலில் ஆடிய மேற்கு அணி 10 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 121 ரன்கள் எடுத்தது. மேற்கு அணி ராஜா 28 ரன்கள், ஜெயகுமார் 27 ரன்கள் எடுத்தனர். பின்னர் ஆடிய மாகே அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 83 ரன்கள் எடுத்தது. மாகே அணியின் விஜீஷ் 34 ரன்கள் எடுத்தார். புதுவை மேற்கு அணியின் ராஜா 2 விக்கெட் எடுத்தார். புதுவை மேற்கு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கு அணியின் ராஜா ஆட்டநாயகன் விருது பெற்றார். காலை 11:45 மணிக்கு நடந்த போட்டியில் காரைக்கால் அணி, புதுவை தெற்கு அணி மோதின. முதலில் ஆடிய காரைக்கால் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 122 ரன்கள் எடுத்தது. மாதவன் 47 ரன்கள், ராஜேஷ் குமார் 31 ரன்கள் எடுத்தனர். புதுவை தெற்கு அணி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 119 ரன்கள் எடுத்தது.பார்த்திபன் 46 ரன்கள், இளங்கோ 24 ரன்கள் எடுத்தனர். காரைக்கால் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காரைக்கால் அணியின் மாதவன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.மதியம் 2:15 மணிக்கு நடந்த போட்டியில் . முதலில் ஆடிய புதுவை வடக்கு அணி 10 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 122 ரன்கள் எடுத்தது. கில்பர்ட் 44 ரன்கள், சைஜு 43 ரன்கள் அடித்தனர். தொடர்ந்து ஆடிய ஏனாம் அணி அபாரமாக ஆடி 9.5 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 123 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெங்கடேஸ்வர ராவ் 42 ரன்கள், சத்தியநாராயணா 37 ரன்கள் எடுத்தனர். ஏனாம் அணி வெங்கடேஸ்வர ராவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்