மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
7 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
7 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
7 hour(s) ago
புதுச்சேரி : கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம் நிறுவனம் இணைந்து நடத்தும், புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டி, கடந்த, 2ம் தேதி துவங்கியது. இந்த போட்டிகள் நாள்தோறும் பகல் இரவாக, மதியம் 3:00 மணிக்கும், இரவு 7:00 மணிக்கும் மின்னொளியில், சேதராப்பட்டில் உள்ள சி.ஏ.பி. சீசெம் மைதானத்தில் நடந்து வருகின்றன. இதில், புதுச்சேரி வடக்கு, புதுச்சேரி தெற்கு, புதுச்சேரி மேற்கு, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் என ஆறு அணிகள் பங்கு பெறுகின்றன. போட்டிகள் பேன்கோடு ஆப்பில், நேரலையாக ஒளிபரப்பாகிறது. தெற்கு அணி அதிரடி
நேற்று முன்தினம் மதியம் நடந்த போட்டியில், புதுச்சேரி தெற்கு மற்றும் மாகி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த புதுச்சேரி தெற்கு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 178 ரன்களை குவித்தது. இதில், ஸ்ருஜன் காரே 57 பந்துகளில் 69 ரன்களும், சிவமுருகன் 29 பந்துகளில் 43 ரன்களும் எடுத்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர் ஆடிய மாகி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து வெறும், 98 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் நாராயணன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில், புதுச்சேரி தெற்கு அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியை பதிவு செய்தது. ஸ்ருஜன் காரே ஆட்டநாயகன் விருது பெற்றார். ஏனாம் அணி வெற்றி
இரவில் நடந்த போட்டியில், புதுச்சேரி வடக்கு அணியும், ஏனாம் அணியும் மோதின. முதலில் ஆடிய ஏனாம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 138 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நகுர் பாபு 33 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். புதுச்சேரி வடக்கு அணியின் ராஜாகவி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய புதுச்சேரி வடக்கு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 131 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விக்ரம் 35 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இதில், ஏனாம் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏனாம் அணியின் நாகுர் பாபு ஆட்டநாயகன் விருது பெற்றார். காரைக்கால் 'த்ரில்' வெற்றி
இந்நிலையில், நேற்று மதியம் நடந்த போட்டியில், காரைக்கால் அணியும், புதுச்சேரி தெற்கு அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த புதுச்சேரி தெற்கு அணி 18.4 ஓவர்களில் 89 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பின், ஆடிய காரைக்கால் அணி 17.4 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 90 ரன்கள் எடுத்து 'த்ரில்' வெற்றி பெற்றது. இதில், 2 விக்கெட் மற்றும் 19 ரன்கள் எடுத்த காரைக்கால் வீரர் ராஜாராம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago