உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி கல்வி துறை பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பள்ளி கல்வி துறை பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

புதுச்சேரி: மாநில பயிற்சி மையம் சார்பில், பள்ளி கல்வி துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மாநிலப் பயிற்சி மையம் சார்பில், புதுச்சேரி பள்ளிகல்வித் துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் பள்ளி தர மதீப்பீடு மற்றும் உறுதி கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் முழுமையான வளர்ச்சி அட்டை குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி தனியார் ஓட்டலில் நடந்தது. சிறப்பு பணி அலுவலர் சுகிர்தாபாய் வரவேற்றார். டில்லி என்.சி.ஆர்.டி., பராக் தலைவர் டாக்டர் இந்திராணி பதுாரி தலைமை தாங்கினார். அரசு செயலர் கிருஷ்ண மோகன் உப்பு, பள்ளி கல்வித் துறை இயக்குனர் மோகன்குமார், சமகிர சிக் ஷா மாநில திட்ட இயக்குனர் எழில்கல்பனா, இணை இயக்குனர்கள் சிவகாமி, செல்வி வெர்பனஜிராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில், ஆய்வுக் கண்காணிப்பு அலுவலர்களுக்கு கட்டமைப்பின் பல்வேறு அம்சங்கள், பள்ளிகளின் தர மதிப்பீட்டு நடைமுறைகள், தர உறுதி நடவடிக்கைகள் மாணவர்களின் கல்வி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை பதிவு செய்யும் டிஜிட்டல் முழுமையான வளர்ச்சி அட்டை குறித்து விரிவாக விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை