உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுார் நபரிடம் ரூ.11.65 லட்சம் மோசடி

வில்லியனுார் நபரிடம் ரூ.11.65 லட்சம் மோசடி

புதுச்சேரி : பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்தவில்லியனுார் நபர் மோசடி கும்பலிடம் ரூ.11.65 லட்சம் இழந்துள்ளார். புதுச்சேரி, வில்லியனுாரை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என, ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி, அவர் பல்வேறு தவணைகளாக மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் 11 லட்சத்து 65 ஆயிரத்து 919 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். இதேபோல், திலாஸ்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், கஸ்டம்ஸ் அதிகாரி போல் பேசினார். அதில், அவரது தோழி பார்சல் அனுப்பியுள்ளதாகவும், அதற்கு கட்டணம் செலுத்தி பார்சலை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். இதை நம்பி, 2 லட்சத்து 77 ஆயிரம் செலுத்தியுள்ளார். அதன்பின், அந்த பார்சலை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அதில் போதை பொருள் இருப்பதாகவும், அதற்கு கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என, மர்ம நபர் தெரிவித்தார். அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதேபோல், வில்லியனுார் நபர் 8 ஆயிரம், கிருமாம்பாக்கம் பெண் 11 ஆயிரத்து 700, முத்தியால்பேட்டை பெண் 12 ஆயிரத்து 695 என, 5 பேர் மோசடி கும்பலிடம் 14 லட்சத்து 75 ஆயிரத்து 314 ரூபாய் இழந்துள்ளனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை