| ADDED : மார் 09, 2024 02:51 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், மணப்பெண் திருமண உதவித்தொகை, 201 பேருக்கு, 50.25 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக, விவசாயத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் மூலம், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள, மணப்பெண்ணின் திருமண உதவித்தொகையாக, ஒரு பயனாளிக்கு, 25 ஆயிரம் ரூபாய் வீதம், 201 பயனாளிகளுக்கு மொத்தம், 50.25 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த உதவித்தொகை கடந்த, 2023ம் ஆண்டு, ஜூலை 25ம் தேதி வரை, விண்ணப்பித்த பயனாளிகளுக்கு, வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பயனாளிகள் விண்ணப்பித்த தேதி மூப்பு அடிப்படையில், நாளை மறுதினத்தில் இருந்து, உதவித்தொகை வங்கியில் செலுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.