உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.எல்.ஏ., துாய்மைப் பணி

எம்.எல்.ஏ., துாய்மைப் பணி

காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் கடற்கரையில் நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., தலைமையில் துாய்மைப் பணி நடந்தது.காரைக்கால், திருப்பட்டினம் பட்டினச்சேரி கடற்கரையில் நேற்று முன்தினம் மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் உட்பட ஆறு சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது.ஆயிரக்காணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமிகளை தரிசனம் செய்தனர். ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.இதனால் கடற்கரை பகுதியில் அதிகளவில் குப்பைகள் குவிந்து காணப்பட்டது. இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏ., நாகதியாகராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடற்கரையில் நேற்று துாய்மை பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்