மேலும் செய்திகள்
போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
1 minutes ago
இன்றைய மின் தடை:புதுச்சேரி
3 minutes ago
தேசிய நெட்பால் சாம்பியன்ஷிப் இன்று துவக்கம்
3 hour(s) ago
மாவட்ட யோகா போட்டி நாளை மறுநாள் துவக்கம்
3 hour(s) ago
புதுச்சேரி: தவளக்குப்பம், காலாப்பட்டு பண்ணை தகவல் ஆலோசனை மையம் சார்பில் முருங்கையில் நவீன சாகுபடி மற்றும் முந்திரி மதிப்பு கூட்டுதல் குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது. தட்டாஞ்சாவடி வேளாண் பயிற்சி மையத்தில் நடந்த முகாமிற்கு வேளாண் அலுவலர் தண்டபாணி வரவேற்றார். துணைத் திட்ட இயக்குனர் (ஆத்மா) கலைச்செல்வி தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் சரவணன் முருங்கை நவீன சாகுபடி குறித்து விளக்கினார். பண்ருட்டி, கேஸ் விட்டா நிறுவனத் தலைவர் ரவி முந்திரி பழத்தில் மதிப்பு கூட்டுதல் குறித்து எளிமையான முறையில் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். வேளாண் அலுவலர் அருணா மண் பரிசோதனை மற்றும் மண்வள அட்டையின் பயன்கள் பற்றி விளக்கம் அளித்தார். இதில், காலாப்பட்டு, தவளக்குப்பத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் புத்தகம் வழங்கப்பட்டது. வேளாண் அலுவலர் கோகுலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆதித்தன் மற்றும் களப்பணியாளர்கள் மாதவன், வனஜா ஆகியோர் செய்திருந்தனர்.
1 minutes ago
3 minutes ago
3 hour(s) ago
3 hour(s) ago