அமலோற்பவம் பள்ளியில் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு
புதுச்சேரி: சர்வதேச கொசு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி சார்பில், கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை பள்ளியின் நிறுவனர் மற்றும் முதுநிலை முதல்வர் லுார்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், 25 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் அமலோற்பவம் ஆரம்பப் பள்ளியில் துவங்கி, உப்பளம் அம்பேத்கர் சாலை, வாணரப்பேட்டை உள்ளிட்டவீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளிக்கு வந்தது. ஊர்வலத்தில் மாணவர்கள் தேங்கி நிற்கும் தண்ணிரை அகற்றுதல், கொசுக் கடியிலிருந்து பாதுகாத்து கொள்ளும் முறைகள், கொசுக்களால் ஏற்படும் டெங்கு, மலேரியா, யானைக்கால் மற்றும் சிக்குன் குனியா போன்ற நோய்களின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துண்டு பிரசுரங்களை வழங்கினர்.