உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மழை பாதிப்புகளுக்கு நிவாரணம் மத்திய அரசுக்கு எம்.பி., கோரிக்கை

மழை பாதிப்புகளுக்கு நிவாரணம் மத்திய அரசுக்கு எம்.பி., கோரிக்கை

புதுச்சேரி: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வசதிகளை செய்து தர வேண்டும் என, வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.லோக்சபாவில் நேற்று ஜீரோ நேரத்தில் அவர் பேசியதாவது: கடந்த 30ம் தேதி பெஞ்சல் புயலானது புதுச்சேரியில் நிலைகொண்டு, ஒருநாள் முழுதும் 50 செ.மீ., மழையை பொழிந்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி முழுமையாக பாதிக்கப்பட்டு, மின்சாரம் தடைப்பட்டுள்ளது. தண்ணீர், பால் பாக்கெட் உள்ளிட்ட உணவு பொருட்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. ஆகையால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளை செய்துதர வேண்டும். அதேபோல், சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாகூர், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு, வில்லியனுார், மணவெளி, அரியாங்குப்பம் காலாப்பட்டு போன்ற பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, அதற்கு உண்டான நிவாரணங்களை வழங்க வேண்டும். இவ்வாறு அவர், பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை