வெள்ளத்தில் சிக்கிய 120 பேரை தேசிய பேரிடர் குழுவினர் மீட்பு
அரியாங்குப்பம்: வெள்ளத்தில் சிக்கிய 120 பேரை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டனர்.பெஞ்சல் புயல், தொடர்ந்து பெய்த கன மழையால், வீடுர் அணை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சங்கராபரணி ஆற்றின் வழியாக, வெள்ளம், கடலுார் சாலை நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் கரைபுரண்டு ஓடிகிறது.நேற்று ஆற்றில், அதிக அளவு வெள்ளநீர் வந்தது. அப்போது, நோணாங்குப்பம், ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டது. அப்போது, கரையோரத்தில் உள்ள என்.ஆர்., நகரில், 140 குடும்பங்கள், குயிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது. தகவலறிந்த, கமாண்டர் கோபிநாத் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்டு படையினர், வீடுகளில் சிக்கி இருந்த 120 பேரை, படகு மூலம் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அவ்களுக்கு தவளக்குப்பம் சுகாதார துறை சேர்ந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். அதே, வெள்ளம், நோணாங்குப்பம், இடையார்பாளையம், நாணமேடு, குடியிருக்கும் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. அந்த பகுதிகளை, கவர்னர் கலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், கலெக்டர் குலோத்துங்கன், தலைமை பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.என்.ஆர்., நகரில், மீட்கப்பட்ட மக்களை தவளக்குப்பம், பூரணாங்குப்பம் ஆகிய இடங்களில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆற்றின் வெள்ளம், குடியிருப்புக்குள் புகாமல் இருக்க நிரந்தர தீர்வு வேண்டும் என முதல்வரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்தனர். என்.ஆர்.,நகரில், வெள்ளத்தில் சிக்கிய 3 மாடுகள், ஆடுகள் மற்றும் வளர்ப்பு நாய் ஒன்றையும் மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.