உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபரை தாக்கிய இருவருக்கு வலை

வாலிபரை தாக்கிய இருவருக்கு வலை

நெட்டப்பாக்கம்: பேனர் வைத்த வாலிபரை தாக்கிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.ஏரிப்பாக்கம், புதுகாலனியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன், 27. இவர் நேற்று முன்தினம் இரவு உறவினர் இறப்பிற்கு அதே பகுதியில் பேனர் வைத்தார். அதற்கு அப்பகுதியைச் சேர்ந்த அருண், 25; சத்தியமூர்த்தி, 23, ஆகியோர் இங்கு ஏன் பேனர் வைக்கிறாய் எனக் கேட்டு, அவரை திட்டி உருட்டுக் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த கலைச்செல்வன் நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர், அளித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, அருண் உள்ளிட்ட இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை