உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய போர்ெவல் பணி: அமைச்சர் துவக்கிவைப்பு

புதிய போர்ெவல் பணி: அமைச்சர் துவக்கிவைப்பு

வில்லியனுார்: ஆரியப்பாளையம் கிராமத்தில் புதிய போர்ெவல் அமைப்பதற்கு வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூஜை செய்து பணியை துவக்கிவைத்தார்.பொதுப்பணித்துறையின் பொது சுகாதார கோட்டம் சார்பில் ரூ.16 லட்சம் செலவில் மங்கலம் தொகுதி ஆரியப்பாளையம் கிராமத்தில் புதிய போர்ெவல் அமைக்கும் பணிக்கான துவக்க விழா நேற்று நடந்தது.விழாவில் வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பூமி பூஜை செய்து புதிய போர்வெல் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர்கள் பீனாராணி, இளநிலைபொறியாளர் திருவேங்கடம் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை