உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு புதிய பஸ்: முதல்வர் வழங்கினார்

பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு புதிய பஸ்: முதல்வர் வழங்கினார்

புதுச்சேரி : புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு, ரூ 25 லட்சம் மதிப்புள்ள, பஸ்சை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு, பஸ் வழங்க, மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து செல்வ கணபதி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ.25 லட்சம் மதிப்புள்ள, 38 இருக்கைகள் கொண்ட பஸ்சை, பல்கலைக்கூடத்திற்கு, நேற்று முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், செல்வ கணபதி எம்.பி., சபா நாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., அரசு செயலர் நெடுஞ்செழியன், கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலிய பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் அன்னபூர்ணா, நடனத்துறை தலைவர் லுார்து சாந்தி, நுண்கலைத்துறை தலைவர் பிரபாகரன், இசைத்துறை பேராசிரியர் விசித்ரா, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி