உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.ஆர்.காங்., ஆண்டு விழா காரைக்காலில் கொண்டாட்டம்

என்.ஆர்.காங்., ஆண்டு விழா காரைக்காலில் கொண்டாட்டம்

காரைக்கால்: காரைக்காலில் என்.ஆர்.காங்., 14ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, வடக்கு தொகுதி சார்பில், இனிப்பு வழங்கி கொண்டாடினர்.காரைக்கால் மாவட்டத்தில் என்.ஆர்.காங்., 14ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, வடக்கு தொகுதியில் திருமுருகன் எம்.எல்.ஏ., தலைமையில் அக்கட்சியினர் பாரதியார் சாலையில் உள்ள ஏழை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.என்.ஆர்.,காங்., சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதேபோல் திருப்பட்டினம் கடைவீதியில் என்.ஆர்.,காங்., சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார் முன்னிலையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். என்.ஆர்.காங்., பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்