உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள் விழா என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் அழைப்பு

முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள் விழா என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் அழைப்பு

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுமாறு, கட்சியினருக்கு என்.ஆர்.காங்., பொதுச் செயலாளர் ஜெயபால் அறிவுருத்தி உள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரம் மேம்பட தொண்டாற்றி வரும் முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளை புதியதோர் எழுச்சி நாளாக கொண்டாட மக்கள் முன்வந்துள்ளனர். மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட முதல்வரின் பிறந்த நாள் விழாவை, 30 தொகுதிகளிலும் கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்குவதோடு முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும், ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கிடவேண்டும்.முதல்வர் பிறந்த நாளான வரும் 4ம் தேதி காலை 8:30 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் தங்க தேர் இழுக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு கதிர்காமம் கதிர்வேல் சுவாமி முருகன் கோவில் மற்றும் பகல் 12 மணிக்கு அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை