உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராமநத்தம் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி: 26 பேர் காயம்

ராமநத்தம் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி: 26 பேர் காயம்

ராமநத்தம் : ராமநத்தம் அருகே சாலை சென்டர் மீடியன் தடுப்பு கட்டையில் தனியார் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 26 பேர் படுகாயமடைந்தனர்.சென்னை, கிளாம்பாக்கம் ஆம்னி பஸ் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் தனியார் ஆம்னி பஸ் (டிஎன்18- பிஎஸ் 0824) 54 பயணிகள் மற்றும் 3 டிரைவர்களுடன் கன்னியாகுமரிக்கு புறப்பட்டது. பஸ்சை கன்னியாகுமரியை சேர்ந்த மணிகண்டன், 56, ஓட்டினார்.நேற்று அதிகாலை 4:30 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆவட்டி அடுத்த லக்கூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியன் தடுப்பு கட்டையில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. அப்போது, அவ்வழியே பின்னால் வந்த சரக்கு லாரி, விபத்துக்குள்ளான ஆம்னி பஸ் மீது மோதியது.இந்த விபத்தில் பஸ் பயணி திருநெல்வேலியை சேர்ந்த சங்கர், 25; சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், கன்னியாகுமரியை சேர்ந்தவர் ஸ்டாலின் கிறிஸ்டோபர், 44, ஆனந்தன், 32, அலெக்சாண்டர் மகள்கள் மேரி கெபிஷா, 23, மேரி பவிஷா, 18, மாரியப்பன், 40, திருநெல்வேலி லட்சுமணன், 22, கார்த்திகேயன், 56, அவரது மகள் வெண்மதி, 21; உட்பட 26 பேர் காயமடைந்தனர். அனைவரும் பெரம்பலுார், திருச்சி, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகினறனர். தகவலறிந்து வந்த ராமநத்தம் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி தலைமையிலான போலீசார், திட்டக்குடி தீயணைப்பு துறையினர், நகாய் ஊழியர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். திட்டக்குடி டி.எஸ்.பி., மோகன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை