உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடல் இன்குபேஷன் சென்டரில் இணையவழி கலந்துரையாடல்

அடல் இன்குபேஷன் சென்டரில் இணையவழி கலந்துரையாடல்

புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் அடல் இன்குபேஷன் சென்டர் சார்பில், வடிவமைப்பு பயன்பாடு மற்றும் அதன் பயன்கள் குறித்த இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.கலந்துரையாடல் நிகழ்ச்சியை, அடல் இன்குபேஷன் சென்டரின் இயக்குனர் சுந்தரமூர்த்தி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு, வைடேசோ தொழில்நுட்ப வல்லுனர் ராஜேஷ் கண்ணா விளக்கம் அளித்தார்.பல்வேறு தொழில்நுட்ப கல்லுாரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இணையவழி கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை, அடல் இன்குபேஷன் சென்டரின் தலைமை செயல் அதிகாரி விஷ்ணு வரதன், தலைமை நிர்வாக அதிகாரி ராஜகுமார், மேலாளர் காமேஸ்வரன், ஆராய்ச்சி பொறியாளர் ஹரி தர்ஷன், செயல் திட்ட வடிவமைப்பாளர் உதயகுமார் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை