உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாப்ஸ்கோ ஊழியர்கள் தலைகீழாக நின்று போராட்டம்

பாப்ஸ்கோ ஊழியர்கள் தலைகீழாக நின்று போராட்டம்

புதுச்சேரி: பாப்ஸ்கோ ஏ.ஐ.டி.யு.சி., ஊழியர் சங்கத்தினர், தலைகீழாக நின்று நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்குவதுடன், நிறுவனத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தி பாப்ஸ்கோ ஏ.ஐ.டி.யூ.சி., சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக நேற்று காலை, தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே ஊழியர்கள் தலைகீழாக நின்று நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினர். ஏ.ஐ.டி.யூ.சி., மாநில தலைவர் தினேஷ்பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம், கவுரவத் தலைவர் அபிேஷகம் முன்னிலை வகித்தனர்.மாநில பொருளாளர் அந்தோணி, துணை தலைவர்கள் அமுதவல்லி, பத்மநாபன், ரவி, ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி