பெயிண்டர் தவறி விழுந்து காயம்
புதுச்சேரி : நெல்லித்தோப்பு, பெரியார் நகரை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ, 50; பெயிண்டர். இவர் கடந்த 7ம் தேதி லாஸ்பேட்டையை சேர்ந்த காண்ட்ராக்டர் மூலம் கொசக்கடை வீதியில் உள்ள சத்தியநாராயணா என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில், சூப்பர்வைசர் செல்வராஜ் முன்னிலையில் தினக்கூலியாக பெயிண்டிங் வேலை செய்தார்.அப்போது, ஜான் போஸ்கோ கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து, படுகாயம் அடைத்தார். அருகில் இருந்தவர்கள் ஜான் போஸ்கோவை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அவரது மனைவி அந்தோணி மரி விக்டோரியா பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில், பெரியக்கடை போலீசார் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் வேலை வாங்கியதாக காண்ட்ராக்டர் சத்யராஜ், சூப்பர்வைசர் செல்வராஜ், கட்டட உரிமையாளர் சத்திய நாராயணா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.