மேலும் செய்திகள்
ஸ்கூட்டர் திருட்டு
16-Jul-2025
பாகூர்: கார் மோதி பெயிண்டர் இறந்தார். அரியாங்குப்பம் பி.சி.பி நகரச் சேர்ந்தவர் ராமு 50; பெயிண்டர். இவர், தனது நண்பர் ரமேஷ் 48; என்பவருடன், நேற்று காலை அரியாங்குப்பம் மார்க்கெட் பகுதியில் உள்ள கடையின் வெளியே நின்றபடி, டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்றிருந்த ராமு, ரமேஷ் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ராமு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ரமேஷை, பொது மக்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16-Jul-2025