உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுார் பள்ளியில் ஓவிய கண்காட்சி 

வில்லியனுார் பள்ளியில் ஓவிய கண்காட்சி 

புதுச்சேரி : வில்லியனுார் புனித லுார்து அன்னை ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஓவிய கண்காட்சி நடந்தது.புனித லுார்து அன்னை ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. பள்ளி தாளாளர் ஆல்வின் அன்பரசு தலைமை தாங்கினார். சப்இன்ஸ்பெக்டர் சூசைராஜ் கண்காட்சியை திறந்து வைத்தார்.ஓவியர் அரியபுத்திரி, வில்லியனுார் ஆலய பங்கு தந்தை ஆல்பர்ட் அடிகளார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பாதிரியார்கள் தோமினிக் சேவியர், ஆரோக்கியராஜ், லுார்துசாமி, தோமினிக், தர்மதுரை வாழ்த்துரை வழங்கினர். 50 சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்து பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.ஆசிரியர் பாலக்கிருஷ்ணன் வரவேற்றார். ஆசிரி யர்கள் சுகுணா, எழில்பிரியா, கரோலின், ஜெனிபர்மேரி, மெரினாமேரி, உடற்கல்வி ஆசிரியர் ஜேம்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 3 நாட்கள் நடந்த கண்காட்சியை மாணவர்கள், பெற்றோர் பார்வையிட்டனர்.ஓவிய ஆசிரியர் சிவநேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை